June 05, 2021

வரலாற்றில் இன்று ஜூன் 5ஆம் தேதி

 

 உலக சுற்றுச்சூழல் தினம் :

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் 1972ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.

 உலக நாடுகளுக்கே பெரும் சவாலான பிரச்சனையாக உருவெடுத்துள்ள சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

 முகம்மது இசுமாயில் :

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (Quaid-e-Millat) என்று போற்றப்படும் இந்திய முஸ்லீம் தலைவர்களுள் ஒருவரான முகம்மது இசுமாயில் 1896ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்தார்.

மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்வதற்காக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார்.

 இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராகவும், சட்டசபை உறுப்பினராகவும் (1946-52), டெல்லி மேலவை உறுப்பினராகவும் (1952-58), நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் (1962, 1967, 1971) பதவி வகித்துள்ளார்.

இசுமாயில் 1972ஆம் ஆண்டு மறைந்தார். இவரின் மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 'காயிதே மில்லத் நாகப்பட்டினம் மாவட்டம் என்று பெயர் சூட்டியது.

 1910ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி ஆங்கில எழுத்தாளரான ஓ ஹென்றி மறைந்தார்.

 

 

 

 

August 04, 2020

Dr Ambedkar Law University Admission 2020 | தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்


இந்து திருமணச் சட்டம் 1955 பிரிவு 9 தாம்பத்ய மீட்புரிமை


தான செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து செய்ய எப்படி எழுதுவது | Gift deeds


தமிழ்நாடு அரசிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி | How to change your name in tamilnadu gazette


காவல் நிலையத்தில் கொடுக்கும் புகாரில் என்னென்ன தகவல் எப்படி எழுதுவது


நிபந்தனை பாக பிரிவினை பத்திரம் செல்லுமா Condition partition deed valid or not