Showing posts with label ஜீவனாம்சம் பெறுவது எப்படி. Show all posts
Showing posts with label ஜீவனாம்சம் பெறுவது எப்படி. Show all posts

June 15, 2020

ஜீவனாம்சம் பெறுவது எப்படி How to get Alimony

குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் பிரிவு 125, மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் சீவனாம்சத்திற்கான கட்டளை. ஜீவனாம்சம் என்பது ஒரு கணவன் தனது சட்டபடியான மனைவி மற்றும் குழந்தைகளை திருமண வாழ்க்கையின் பாதியில்  விட்டுவிட்டு சென்றுவிட்டால் பிழைக்க வழியில்லாமல் குழந்தைகளை படிக்க வைக்க முடியாமலும் தன்னைதானே பராமரித்து கொள்ள இயலாமல் உள்ள பெண்கள் மற்றும் அவர்களுடைய மைனர் குழந்தைகளுக்காக உணவு உடை இருப்பிடம் மருத்துவ செலவுகளுக்காக கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு மனு செய்து நீதிமன்றம் மூலம் வாங்கிகொள்ளும் தொகை ஜீவனாம்சம் ஆகும்.                                                                                                                                         

ஜீவனாம்சம் இரண்டு வகைபடும்                                                                                                                

1. இடைக்கால ஜீவனாம்சம். 

2. நிரந்தர ஜீவனாம்சம்

1.குடும்ப பிரச்சனை குறித்து நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளபோது வழக்கு முடியும் வரையில் (தீர்ப்பு சொல்லும் வரையில்) ஒரு தொகையை தனக்காகவும் தனது குழந்தைகளுக்காகவும் கேட்டு நீதிமன்றத்தில் இடைக்கால மனுததாக்கல் செய்து இடைக்காலஜீவனாம்சம் பெறலாம்.

 2. நிரந்தர ஜீவனாம்சம் மெயின் வழக்கில் தீர்ப்பு சொல்லபட்டு அதன்மூலம் நிரந்தரமாக ஜீவனாம்சம் தொகை பெற்றுக்கொள்வது ஆகும்.

 ஜீவனாம்சம் யார் கேட்டு பெறலாம்.         

வேண்டிய அளவு வசதி இருக்கிற யாரும்  பின்வரக்கூடிய யாரும் யாரையாவது பராமரிக்காமல் புறக்கணிப்பதாக, அல்லது மறுப்பதாக நிருபிக்கப் படும்போது, அந்த நபரின் மனைவி அல்லது குழந்தை, அல்லது தாயின் பராமரிப்புக்காக, நீதித்துறை  நடுவர் நீதிமன்றம் தகுந்தது எனக் கருதுகின்ற பணத்தை மாதந்தோறும் கொடுக்க வேண்டும் என்று கட்டளை இடும்.

                                                                                                                                                                                  தனக்கு தானே தேவையான உணவு உடை இருப்பிடம் இதர செலவுகளுக்கு  பராமரித்துக்கொள்ள இயலாத மனைவி.

மேலும் தன்னை தானே பராமரித்து கொள்ள இயலாத (இளவர்) (minor) வயதுவராத சட்டமுறை படியோ  அல்லது முறை தவறியோ பிறந்த குழந்தைகளும்.

மற்றும் வயதுக்கு வந்துள்ள (திருமணம் ஆன மகள் அல்லாத) முறைபடி பிறந்த அல்லது முறைதவறி பிறந்த அவருடைய குழந்தையை  உள்ளத்துக்கும் உடலுக்கும் ஏற்பட்ட ஊனம் அல்லது கேட்டின் பாதிப்பினால் தன்னைதானே பராமரித்து கொள்ள இயலாத குழந்தைகள்.

ஒரு தந்தை அல்லது தாயை  ஒரு மகன் அல்லது நபர் ஒருவர்  தனது அப்பா அல்லது அம்மாவை பராமரித்து காப்பாற்ற தவறி இருக்கும்போது அந்த அப்பா அல்லது அம்மா மகனிடம் ஜீவனாம்சம் கேட்டு பெறலாம்.                                                                                                                                                                                           

விளக்கம்

1.   இளவர் (minor) என்பது வயது வந்தோர்  சட்டம் 1875 (சட்ட எண் 9 1875, வகை முறைகளின்படி வயது வராதது என்று பொருள் படும்.

2.   மனைவி என்பவர் (விவாகரத்து செய்யப்பட்ட மனைவியும் உள்ளடங்குவார்) ஆனால் மறுதிருமணம் செய்துகொண்டு இருக்ககூடாது.       

யாரெல்லாம் ஜீவனாம்சம் கேட்டு பெற தகுதி இல்லாதவர்

1.   மறுமணம் செய்துகொண்ட பெண்கள் முதல் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்க முடியாது.

2.   இந்து மனைவி கற்பிறழ்ந்திருக்கும் போதும் இந்து மதத்தைவிட்டு வேறு மதத்திற்கு மாறியிருக்கும்போது அவளுடைய கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்க முடியாது.                                                                                                                                                        

3. மனைவி நிலம் மற்றும் அசையாச் சொத்துக்களுடன் தன்னை பராமரித்துக்கொள்ள போதுமான வசதி வாய்ப்புகளுடன் இருந்தால் அவளது கணவனிடம் ஜீவனாம்சம் கேட்டு பெறமுடியாது.  

தீர்ப்புகள்

1.  கணவன் வேறு பெண்ணுடன் வாழ்ந்து வரும்போது மனைவி கணவனிடம் சீவனாம்சம் கேட்கலாம், தீர்ப்பு  .ஐ.ஆர் 1999 எஸ்.சி.2374. உச்சநீதிமன்றம்  மற்றும் 1999 .(2)  சி.டி.சி 646.

2.   மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் தேதி வரை சீவனாம்சம் பெறலாம். 1982 (3)  எஸ்.சி.சி 477. உச்சநீதிமன்றம்.                                        

3.   மாற்றாந் தாய் சிவனாம்சம் கேட்க முடியாது. 1989 கிரிமினல் லா ஜர்னல் 673.

4.   மனைவி வசதியுடன் இருந்தால் சீவனாம்சம் தரவேண்டியதில்லை கசென்னை 1997 (2) சி.டி.சி 138.

5.   மனைவி வசிக்கும் இடத்தில் இருக்கும் நீதிமன்றத்தில் சீவனாம்சம் கேட்டு மனுதாக்கல் செய்யலாம்  1998 (3) சி.டி.சி 106.                                                                                    

6.   பெற்றோர்கள் யாரிடம் சீவனாம்சம் கேட்கிறார்களோ அந்த நபர் எந்த இடத்தில் வசிக்கிறாரோ அந்த இடத்துக்கு அருகில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் 2004 எஸ்சிசி கிரிமினல் 1576, ஏ.ஐ.ஆர் 1987 எஸ்சி 1100                                                                                                                                                                               

7.   சீவனாம்ச பாக்கி பணத்துக்காக நடுவர் ஒரு நபரை சிறையில் வைக்கலாம் அதற்கு மேல் வைக்க முடியாது. 2004 எம்.எல் ஜே. கிரிமினல் 400 சென்னை .

8.   கணவர் சீவனாம்ச தொகையை கொடுக்க தவறும் பட்சத்தில் நடுவர் கணவனர ஒரு மாதம் வரை சிறையில் வைக்கலாம் 1995(5)   எஸ் சிசி 672