July 03, 2020

தான செட்டில்மெண்ட் ரத்து செய்தால் வில்லங்கசான்றிதழில் வருமா?

தானசெட்டில்மெண்ட்ரத்துசெய்தால்வில்லங்கசான்றிதழில்வருமா?

தானசெட்டில்மெண்ட்இரண்டுவகைபடும்.

    நிபந்தனையுடன்கூடியதானசெட்டில்மெண்ட்.

        நிபந்தனை இல்லாததானசெட்டில்மென்ட்

எந்தவகைதான செட்டில்மெண்ட் ஆக இருந்தாலும் அதை இரத்து செய்ய இயலாது பத்திர பதிவு அலுவலகத்தில் ரத்துசெய்து கொடுத்துவிடுவார்கள். ஆனால் தான செட்டில்மெண்ட் வாங்கிய நபர் கோர்ட்டுக்கு போனால் தீர்ப்பு அவருக்குசாதகமாக வரும் தானசெட்டில்மெண்ட் மூலம் பட்டா மாற்றம் செய்து இருந்தாலும் தான செட்டில்மெண்ட் ரத்து செய்ய. முடியாது. ஆனால் சொத்தை தான செட்டில்மெண்ட் கொடுத்தவர் பத்திரபதிவு ஆபிசில் ரத்து செய்து அதையும் பதிவு செய்துவிட்டால் இந்த விபரம் வில்லங்க சான்றிதழில் போட்டு பார்க்கும்போது வந்துவிடும், இதனால் நிலத்தை தான செட்டில்மெண்ட் மூலம் வாங்கியவர் வேறு நபருக்கு சொத்தை விற்க முடியாது. தானத்தை வழங்கியவர் கோர்ட்டுக்கு போனால் தான் செட்டில்மென்ட் கேன்சல் செய்த விபரத்தை நீக்க முடியும்.

June 27, 2020

இந்து வாரிசுரிமை சட்டம் - வாரிசு உரிமை யாரெல்லாம் கோரலாம்

இந்து வாரிசுரிமை சட்டத்தின் படி  மட்டுமே பொருந்தும்,

மற்ற மதத்தினருக்கு வித்தியாசபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .                               

1. திருமணமான ஆணின் சொத்துக்கு உரிமைமனைவி மக்கள் தாய்.                                               

2. திருமணமாகாத ஆணின் சொத்துக்கு உரிமை பெற்றோர்.                       

3.திருமணமான பெண்ணின் சொத்துக்கு உரிமை கணவன் - பிள்ளைகள்.

4.திருமணமாகாத பெண்ணின் சொத்துக்கு உரிமை பெற்றோர்.                                               

5. பெற்றோர்கள் இல்லையென்றால் இரண்டு தரப்புக்கு மே சகோதர சகோதரிகள் உரிமை கொண்டாடலாம்.                                                                                                                                     

6. திருமணமாகிவிட்ட ஒரு ஆணின் மனைவி மக்கள் இறந்து விட்டால் அவருடைய மகன் அல்லது மகள் வயிற்று வாரிசுகளுக்கு நேரடியாக சொத்து போகும்.                          

7. கணவர் இறப்பிற்கு அவரது மனைவியே காரணம் என்று சட்டத்தின் மூலம் நிருபிக்க பட்டாலோ அல்லது கணவரது மரண. வழக்கில் மனைவி சம்பந்தப்பட்டு இருந்தாலோ மனைவி கணவரது சொத்தில் பங்கு கேட்க முடியாது.

பட்டா சிட்டா என்றால் என்ன

நிலத்தின் உரிமை நமக்குதான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும்.   பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்யப்படுகிறது.                   

 பின்வரும்  விபரங்கள் பட்டாவில் இருக்கும். 

1.மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்.    

2. பட்டா எண்                                                                                                    

3. உரிமையாளர் பெயர்                                                                         

4.புலஎண்ணும் உட்பிரிவும்  (சர்வே நெம்பர் மற்றும் சப்டிவிசன்)

5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா                             

6.நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வைசிட்டா  ஒரு தனிநபருக்கான குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு இதில் சொத்தின் உரிமையாளர் பெயர் பட்டா எண்கள். நிலம் நன் செய் அல்லது புன்செய் பயன்பாடு தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.


சொத்து ஆவணங்கள் தொலைந்து போனால் நடவடிக்கை எப்படி எடுப்பது

சொத்து ஆவணங்கள் தொலைந்து போனால் தொலைந்து போன இடத்திற்குரிய இடத்துக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் புகார் பெற்றுக்கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் (உதாரணம் ஒரு பதினைந்து நாட்களோ அல்லது முப்பது நாட்களுக்குள்ளோ, அறுபது நாட்களுக்குள்) தொலைந்து போனது உண்மையா என விசாரித்து FIR முதல் தகவல் அறிக்கை தருவார்கள். செய்தித்தாளில் விளம்பரம் செய்து, காணாமல் போன  சொத்து ஆவணங்களுக்கான எண் பதிவுகள், முதல் தகவல் அறிக்கை எண், மற்றும் செய்தித்தாள் விளம்பரம் அனைத்தையும் ஒரு முத்திரை தாளில் டைப் செய்து ஒரு நோட்டரி பப்ளிக்கிடம் கையொப்பம் பெற வேண்டும் , இவற்றை எடுத்துக்  கொண்டு பத்திரபதிவு அலுவலகத்துக்கு சென்று கொடுக்க வேண்டும் அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட நாளில் பத்திரபதிவு நகல் பெறலாம்.


June 26, 2020

தகவல் அறியும் உரிமைச் சட்டம் Right to Information Act 2005

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005  பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த சட்டமானது ஒவ்வொரு இந்திய குடிமகனும், குடிமகளும், கேள்வி கேட்கும் உரிமை தங்களுக்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.     இந்த சட்டத்தின்படி அரசு துறை மற்றும், அரசு உதவிபெறும் துறை அரசு அலுவலகங்களிடமிருந்தும் தேவையான தகவல்களை பெறலாம் உதாரணத்துக்கு குடும்ப அட்டை குறித்த விபரங்கள், வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு காலதாமதம் குறித்தும், இது போன்று பல்வேறு அரசு அலுவலகங்களில் இருந்தும் தகவல்கள் கேட்டு பெறலாம்,    என்ன காரணத்துக்காக தகவல் தேவைபடுகிறது என்று தகவல் கேட்கும் விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டியதில்லை.
 
எவ்வாறு விண்ணப்பிக்கலாம்

1. இந்த சட்டம் பிரிவு 6ன் படி தகவல்கள் கேட்டு விண்ணப்பத்தினை கடிதம் மூலம் பதிவு அஞ்சலில் அனுப்பலாம்.
                                   
2. இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.                                                                    
3. விண்ணப்பத்தினை தகவல் கேட்கும் அலுவலகத்தில் நேரில் சென்றும் கொடுக்கலாம்.
  
4. ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் ஒரு பொது தகவல் அதிகாரி இருப்பார் விண்ணப்பத்தில் பெறுநர் முகவரியில் பொது தகவல் அதிகாரி என்று குறிப்பிட்டு அலுவலகத்தின் முகவரியை குறிப்பிட்டு எமுத வேண்டும்.

5. விண்ணப்பத்தில் விண்ணப்ப கட்டணமாக பத்து ரூபாய்க்கான ரூ.10/-க்கு நீதிமன்ற முத்திரை வில்லை ஒட்ட வேண்டும். அல்லது டிமாண்ட் டிராப்டாகவும் எடுத்து அனுப்பலாம்.                                                                                                                                                
6. விண்ணப்பம் கிடைத்த முப்பது நாட்களுக்குள் பொது தகவல் அதிகாரி பதில் தரவேண்டும்.        தராவிட்டால் என்ன காரணத்துக்காக தரவில்லை என்றும் குறிப்பட்டு எங்கு மேல்முறையிடு செய்யலாம் என்பது குறித்தும்  விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.

7. அவசரமான ஒருவருடைய வாழ்க்கை மற்றும் உயிர் காக்க சம்பந்தபட்ட தகவல்கள் என்றால் 48 மணி நேரத்துக்குள் பதில் பெறலாம்.

8. தகவல் கொடுக்க மறுத்தால் இந்த சட்டத்தின் பிரிவுகள் 8 மற்றும்  9 ல் குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டும்  தகவல் தரமாட்டார்கள்.
 
9. முப்பது நாட்களுக்குள் பதில் தராவிட்டால்  மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.  இந்த சட்டத்தின்படி குறிப்பிட்ட 30 நாட்களுக்குள், தகவல் தராமல் இருந்தாலோ, தப்பான தகவல் கொடுக்கபட்டாலோ, வேணும்னே உண்மையை  மறைச்சு திருத்தபட்ட தகவல் கொடுக்கபட்டாலும் அதற்காக தகவல் அதிகாரிக்கு ரு.250 முதல் 25.000/- (ரூபாய் இரண்டு நூற்று அம்பது முதல் ருபாய் இருபத்து ஐந்தாயிரம் ) வரை  அபராதம் விதிக்கப்படும் மேலும் துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்கபடும்.

பிணை ஆணை - Bail

பிணை மனு அதாவது ஜாமின் காவல்துறையினரால்  கைது செய்யபட்டவரையோ, அல்லது நீதிமன்றத்தால் சிறையில் அடைக்கபட்டவர்களையோ, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வெளியில், பிணையில் விடுவதாகும்.  

பிணையின் வகைகள்

1.உடனடியாக பிணையில் செல்வது என்பது, பிணையில் உடனடியாக விடக்கூடிய குற்றங்களை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து  இருக்கும் பட்சத்தில் காவல் அதிகாரி பிணையில் விடலாம். அல்லது குற்றம் சாட்டபட்ட நபரை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தபட்டால்  குற்றவியல் விசாரணை நடை முறை சட்டம் பிரிவு 436 ன் படி பிணை மனுதாக்கல் செய்தால் நீதிமன்றம்  உத்தரவிடும் அதன் பிறகுஇரண்டு பிணைதாரர்களையோ அல்லது ஒரு பிணைதாரரையோ, அல்லது சொந்தபினணயிலோ விடுவிக்கும்.
                                              
2. பிணையில் விடக்கூடாத குற்றத்தை செய்து இருக்கும் ஒரு நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கபட்டு இருக்கும் போது 'குற்றவியல் நடுவர்  நீதிமன்றத்தில் குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம்  பிரிவு 437 ன் படி பிணை மனுதாக்கல் செய்யலாம் அதன் பின்பு நீதிமன்றம் புலன்விசாரனண அதிகாரிக்கும், அரசு வழக்கறிஞருக்கும் அறிவிப்பு கொடுத்த பின்பு இருதரப்பு வாதங்களை கேட்டபின்பு நீதிமன்றம் திருப்தி அடைந்தால் பிணை உத்தரவு வழங்கும். அதன் பின்பு இரண்டு ஜாமின் தார்களோ, அல்லது ஒரு நபரோ பிணை பத்திரம் எழுதிக் கொடுத்த பின்பு ( பாண்டு) சிறையில் இருந்து வெளியில் வரலாம். அதன்பிறகு புலன் விசாரணை அதிகாரி முன்போ, அல்லது உத்தரவிட்ட நீதிமன்றத்தின் முன் போ ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தால் அந்த உத்தரவை குற்றம் சாட்டப்பட்ட நபர் உத்தரவினை நிறைவேற்ற வேண்டும்.

3. நீதித்துறை  குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தினாலும், மாவட்ட அமர்வு நிதிமன்றத்தினால் விசாரிக்க கூடிய வழக்குகளில் போலிசாரால் தேடப்பட்டுவரும் நபர் ஒருவர் அரஸ்ட் ஆகாமல் ஜாமினில் செல்வதற்கு குற்றவியல் விசாரணை முறை  சட்டம் பிரிவு 438 ன் படி ஜாமின் மனு மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலோ, அல்லது உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ மனுதாக்கல் செய்து முன்ஜாமின் பெறலாம்.

4. மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் விசாரணை செய்யக் கூடிய குற்றங்களிலும், நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யபட்ட பிணை மனுக்களின் மேல்முறையீடுகளிலும் குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 439 ன்படி மனுதாக்கல் செய்து உத்தரவு பெறலாம். 

கைது செய்யப்பட்ட நபரின் உரிமைகள் Rights of arrested person

June 24, 2020

கேவியட் மனு - Caveat Petition

பிரிவு 148-அ-  உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908 (Caveat petition), முன்னெச்சரிக்கை மனு  கேவியட் மனு என்பது என்ன என்னவென்று தெரிந்து கொள்ளலாம். ஒரு நபருக்கும்,  வேறு ஒரு நபருக்கும் எதிராகவும் ஒரு சொத்து பிரச்சனையோ, இடம் சம்பந்தப்பட்ட, தொழில் சம்பந்தபட்டதோ அல்லது வாடகை, ஒப்பந்தம் , கிரையம்,மற்றும் இதர பல்வேறு உரிமையியல் பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட விசயங்களில் ஒரு நபருக்கு எதிராகவோ, ஒரு கம்பெனிக்கு எதிராக உரிமையியல் வழக்கு தாக்கல் செய்து தடை ஆணை (Stay Order) அல்லது உறுத்துக்கட்டளையை (Injection order) யை ஒருதலைபட்சமாக உரிமையியல் நீதிமன்றத்திலோ பெற்று விடுவார்கள் என்று ஒருவர் அறியும் பட்சத்தில் ஒருதலை பட்சமாக உத்தரவு கிடைக்க கூடாது என்பதற்காக  நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யும் மனுதான் முன்னெச்சரிக்கை மனு (கேவியட் மனு ) ஆகும்.   அந்த கேவியட் மனுதாக்கல் செய்பவரை கேவியட் மனுதாரர் என்றழைக்கபடுவர்.                             
•    கேவியட் மனுவை  முதலில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ( District Munsif Court) 2. சார்பு நீதிமன்றம் (Sub Court)   3.  மாவட்ட நீதிமன்றம் (District Court)  உயர்நீதிமன்றம் (High Court)   லும் தாக்கல் செய்யலாம்.      
                                                  
• முன்னெச்சரிக்கை மனு  (கேவியட் மனு) வின் நகல் ஒன்றை எதிர்தரப்பினருக்கு  அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் பதிவு அஞ்சலில் அனுப்பவேண்டும்.  
• கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு பின்பு உரிமை வழக்கு தாக்கல் செய்யப் படும்போது நீதிமன்றம் கேவியட் மனு தாக்கல் செய்த கேவியட்டருக்கு வழக்கு பற்றி அறிவிப்பு கொடுப்பார்கள், அல்லது, உரிமை வழக்கு தாக்கல் செய்தவரோ, அல்லது அவர்களின் வழக்கிறிஞர் மூலமாகவோ, பதிவு அஞ்சல் மூலமாகவே, கேவியட் மனுதாரருக்கு  உரிமை வழக்கு தாக்கல் செய்துள்ளது பற்ற அறிவிப்பு கொடுக்கபடவேண்டும்.                                                                                                                               • கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்ட தேதி முதல் தொண்ணூறு நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும், அதற்கு பிறகு காலாவதியாகிவிடும்.                                  

கேவியட் மனுதாக்கல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.  
                          
 1. கேவியட் மனு அவசரமாக உள்ள போது கேவியட்டரின்  மனுவையும் அதனுடன் கேவியட்டரின்  பிரமாண வாக்குமூலத்தையும் சேர்த்து ஒன்றாக இணைத்து தாக்கல் செய்ய  வேண்டும்.                                                                                                                                        
2. எதிர்மனுதாரருக்கு பதிவு அஞ்சலில் அனுப்பிய ரசிதை தனியாக டாக்கட் போட்டு மனுவுடன் இணைத்து நீதிமன்றத்தில் பைல் பண்ண வேண்டும்.        
3. கேவியட் மனுவுடன் கேவியட்டரால்  கையெழுத்து செய்த வக்காலத்து நாமாவையும்  இணைத்து  பைல் பண்ணனும்.           
4. கேவியட் மனுவுக்கும். வக்காலத்து நாமாவுக்கும் கோர்ட் ஸ்டாம்ப்  ஒட்டி     தாக்கல் செய்ய வேண்டும்